Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12 ஆயிரம் கன அடியாக குறைந்த தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி…. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

 அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி முதல் அருவியில் தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழை நின்றுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் குறைந்து 12 ஆயிரம் கனஅடியாக வந்துள்ளது. இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் சாந்தி அதிரடியாக உத்தரவிட்டார்.  ஆனால் பரிசல் ஓட்டிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Categories

Tech |