மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி யோகாவில் பல பதக்கங்களை குவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி சுபானு. இவர் சிறுவயதில் இருந்தே யோகா மீது ஆர்வம் கொண்டார். இவர் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஆப்பிரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்றும் யோகாவில் சாதனை படைத்திருக்கிறார்.
இந்நிலையில் மாணவியின் தந்தை கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. இருப்பினும் மாணவி விடாமுயற்சியுடன் சாதனை படைக்க வேண்டும் என உறுதிபூண்டு யோகாவில் பல்வேறு நிலைகளில் சாதனை படைத்து அமைச்சர்கள் உட்பட பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இதுவரை மாணவி 270 பதக்கங்களை வென்றுள்ளார். தாயின் சிறிய வருமானத்தின் மூலமாக தற்பொழுது நாகப்பட்டினத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் நேச்சுரோபதி யோகா பயின்று வருகின்றார். இந்நிலையில் மாணவி யோகாவை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி ஒலிம்பிக்கில் சேர்த்தால் இந்தியா சார்பாக பங்கேற்று நான் தங்கப் பதக்கம் வெல்வேன் என கூறி இருக்கின்றார்.