Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மஞ்சூர்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து”…. வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு….!!!!!

மஞ்சூர்- கோவை இடையேயான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரிலிருந்து முள்ளி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை சாலை செல்கின்ற நிலையில் சமீபகாலமாக சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. இதன் அருகே வனப்பகுதியில் இருக்கின்றது.

இந்நிலையில் கோவையில் இருந்து மஞ்சூர் அருகே நேற்று மாலை அரசு பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது 5 காட்டு யானைகள் திடீரென பஸ்சை வழிமறித்து குறுக்கே நின்றது. இதனால் ஓட்டுனர் சிறிது தூரத்திற்கு முன்பாகவே பேருந்தை நிறுத்தி விட்டார்.

அரை மணி நேரமாக சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானைகள் பின் வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. இதனால் வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கின்றனர்.

Categories

Tech |