தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியில் நுழைவு வரி வசூலிக்கும் ரசீது வழங்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பிரபல சுற்றுலா தளமாக இருக்கின்றது. இங்கே கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் கேரளா, கர்நாடகம், தமிழகம் இணையும் பகுதி என்பதால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
மாநில எல்லைகளில் நுழைவு வரியானது வசூலிக்கப்படுகிறது. சென்றமாதம் நீலகிரியில் மலர் கண்காட்சிகள், கோடை விழா என நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். இதனால் அதிக போக்குவரத்து வந்து சென்றது. இதனால் சுங்கசாவடியில் மும்முரமாக நுழைவு வரி வசூலிக்கப்பட்டது. நுழைவு வரி வசூலிக்கப்பட்டும் ரசீது வழங்கப்படவில்லை.
இதனால் புகார் எழுந்தது. இதனால் பெரும்பாலானோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். சிலர் தங்களின் அதிருப்தியை தெரிவித்து விட்டு சென்றார்கள். மேலும் சிலரோ வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றார்கள். இது தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் இந்த போக்கு தொடர்ந்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என புகார் தெரிவித்து வருகின்றார்கள். ஆகையால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.