Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 1 ரிசல்ட் எப்போது தெரியுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏற்கனவே திட்டமிட்ட தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள், பள்ளிகள் மற்றும் மாவட்ட வாரியாக தயார் செய்யப்பட்டுள்ளன.

எனவே ஜூலை 7ஆம் தேதி பிளஸ் 1 ரிசல்ட் வெளியிடப்படும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கு முன்னதாக ஜூன் 30 அல்லது ஜூலை 1 ஆம் தேதி ரிசல்ட் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |