கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள அரசு ஐஐடி கல்லூரிக்கு மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எம்எல்ஏ ஶ்ரீனிவாஸ் ஆய்வுக்கு சென்றுள்ளார். கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர் கல்லூரி முதல்வரிடம் கல்லூரியில் நடைபெறும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் கல்லூரி முதல்வரின் பதில் திருப்தி தராததால் யாரும் எதிர்பாராத விதமாக சக ஊழியர்கள், அதிகாரிகள் முன்னிலையில் கல்லூரி முதல்வரை திட்டியதோடு மட்டுமல்லாமல் எம்எல்ஏ கன்னத்தில் இரண்டு முறை அறைந்துள்ளார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.