இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 255 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தென் கிழக்கே உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் நிர்வாகத்தின் இயற்கை பேரிடர் அமைச்சகத்தின் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.