Categories
தேசிய செய்திகள்

“செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு”…. பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!!!!!

கிருஷ்ணா நதி நீர் வரத்தாலும்  கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் புதன்கிழமை காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் 23.60 அடியாகவும் மொத்த கொள்ளளவு 3540 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 775 கன அடியாகவும் இருக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர்மட்டம் 23.60 அடியாக இருக்கிறது. ஏரி நீர்மட்டம் உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஏரியில் முதல் கட்டமாக 250 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக கிருஷ்ணா கால்வாய் நீர் வரத்து 775 கனஅடியாக உயர்ந்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை காலை 9 மணி அளவில் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 250 கன அடியிலிருந்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் திருமுடிவாக்கம், வழுதலம்பெடு, நந்தம்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்டு இருப்ப தால் ஏரியின் கரையோரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Categories

Tech |