Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு அமெரிக்க டாலரா?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சட்டவிரோதமாக கொண்டு வந்த அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதைப்போல் நேற்று சுங்கா இலாகா  அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்ற  வாலிபரின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் அவர் முகமது ஷாருக்கான் என்பதும், சட்டவிரோதமாக 34 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை மறைத்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முகமது ஷாருக்கானை  கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |