Categories
உலக செய்திகள்

அலியா பட் திரைப்படத்தின் வசனம்…. கேலி செய்த பாகிஸ்தான் ரெஸ்டாரண்ட்…. பின் நடந்த சம்பவம்…..!!!!

அலியாபட் திரைப்படத்தின் வசனத்தை வைத்து கேலி செய்த பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் அலியாபட் நடித்த திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி ஆகும். இந்த படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் அலியா பட் நடித்து இருந்தார். இதில் ஒரு காட்சியில் ஆண்களுக்கு தள்ளுபடி சலுகையுண்டு என அவர் விளம்பரம் செய்வது போன்று காட்சி இடம்பெறும். இந்நிலையில் இந்த வசனத்தை வைத்து பாகிஸ்தான் நாட்டின் கராச்சியிலுள்ள ஒரு ரெஸ்டாரென்ட், ஆண்களுக்கு தள்ளுபடி சலுகையுண்டு என்று சுவரொட்டி ஒட்டி, அவற்றில் அலியா பட்டின் புகைப்படத்தையும் வெளியிட்டது.
இந்த விளம்பரமானது சமூகவலைத்தளத்தில்  வைரலாகியது. உடனடியாக நெட்டிசன்கள் பலரும் இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையில் சாப்பிட வரும் இடத்தில் இப்படியா விளம்பரம் செய்வது..? இது உணவு விடுதியா அல்லது பாலியல் தொழில் விடுதியா..? என்றெல்லாம் கருத்துகளை வெளியிட்டு, அந்த ரெஸ்டாரென்ட்டை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அதன்பின் மிரண்டுபோன ரெஸ்டாரென்ட் நிர்வாகத்தினர், உடனே இந்த விளம்பரத்துக்காக மன்னிப்பு கேட்டனர். “உணவில் ஆண்களுக்கு சலுகை தருவதற்காக இவ்வாறு விளம்பரம் செய்தோம். எங்களை மனித்து விடுங்கள்” என்று கூறி சுவரொட்டிகளை அகற்றிவிட்டனர்.

Categories

Tech |