10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் எழில்நகரில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் முகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 10-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் முகேஷ் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் முகேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முகேஷை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.