Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல டாக்டர் பட ஹீரோயின்…. கிளாமரில் இறங்கப் போவதாக கருத்து…. இணையத்தில் வைரல் வீடியோ….!!!

பிரபல நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னடத்தில் வெளியான ஒன்ட் கதே‌‌ ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலமாக பிரியங்கா அருள்மோகன் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கில் நானியுடன் இணைந்து கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், பிரியங்கா அருள்மோகன் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான டான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தப்படமும் வெற்றி பெற்றதால் பிரியங்கா அருள் மோகன் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார். இந்நிலையில்  பிரியங்கா அருள்மோகன் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் ஆடை அணிவது அவரவர் விருப்பம் என்றும், படங்களில் கவர்ச்சியாக உடை அணிவது தவறில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அதுக்குள் கவர்ச்சி கருத்து கூற ஆரம்பித்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |