முககவசம் அணிவது மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்றவற்றால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100 கீழிருந்த தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 737 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த மதிப்பு 34 லட்சத்து 62 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4360.
இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.