Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி செல்ல முயன்ற கார்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சுரேஷ்(50) என்பவர் மேற்பார்வை தலைமை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல் நெடுஞ்சாலைத்துறையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(46) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணி நிமித்தமாக சுரேஷ் சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை பச்சையப்பன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு நசியனூர் அருகே சென்றபோது பச்சையப்பன் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த சுரேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சையப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |