சீனாவில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்க சென்ற சிறப்பு விமானம் 323 இந்தியர்களுடன் தாயகம் திரும்பியது.
கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் 259_ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 11,791 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மீதம் இருக்கும் இந்தியர்களை மீட்க இரண்டாவதுஒரு தனி விமானம் இந்தியாவில் இருந்து புறப்படட்டது. அந்த விமானமும் சீனாவில் இருந்த எஞ்சிய இந்தியர்களை அழைத்து வந்தது. சீனாவில் இருந்து 323 இந்தியர்களுடன் டெல்லி வந்தது 2ஆவது விமானம். வுகானில் சிக்கித் தவித்த மாலத்தீவு நாட்டை சேர்ந்த 7 பேரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.