தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அந்தத் தேர்வு முடிவுகளில் 10 ஆம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், 12 ஆம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததாலும், மதிப்பெண் குறைவாக பெற்றதாலும் விரக்தியடைந்த ஒரு சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதாவது தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை மாதம் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் ஜூலை மாதம் தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர் கல்வியைத் தொடரலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.