Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் தடை…. களத்தில் இறங்கிய அரசு…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த நடவடிக்கையை டெல்லி அரசு தீவிரமாக தற்போது செயல்படுத்தி வருகின்றது. அது தொடர்பாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் மற்றும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வகையில் பிளாஸ்டிக் கழிவுகளின் உற்பத்தியை கண்காணிக்கவும்,ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சட்டவிரோதமாக தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றிற்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள்:

பிளாஸ்டிக் குட்சிகளுடனான இயர் பட்ஸ், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்க்ரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல், தட்டுகள், கோப்பைகள், முள் கரண்டி, கரண்டி, கத்தி, உறிஞ்சு குழாய், தட்டம், இனிப்பு பொட்டலங்களை சுற்றும் படலம், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட், பிளாஸ்டிக் அல்லது 100 மைக்ரோன்களுக்கு குறைவாக உள்ள பி.வி.சி பதாகைகள், கிளறு குச்சிகள்

Categories

Tech |