Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSயை ஏற்காவிட்டால் குண்டு வெடிக்கும்…. மிரட்டல் விடுத்த நபர்…. அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக பன்னீர்செல்வம் ஏற்க்கபடாவிட்டால் சேலம், தாம்பரம் ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மற்றும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Categories

Tech |