Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வாலிபர்…. கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

ஏ.டி.எம். எந்திரத்தை  உடைத்து பணம் திருட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேடு பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பணம் எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த வாலிபர் ஒருவர்  எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றுள்ளார்.  ஆனால் பணம் வராததால் அந்த வாலிபர் சென்றுவிடடார்.

இதுகுறித்து  பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஏ.டி.எம். மையத்தின் மேலாளர் சந்திரசேகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஏ.டி.எம். மையத்தை சோதனை செய்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சேகர் பிள்ளை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சேகர் பிள்ளையை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |