Categories
தேசிய செய்திகள்

பலாத்காரம் செய்ய முயன்ற நபர்….. ஒரே போடு போட்டு கொன்ற பெண்….. துணிகர சம்பவம்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கூடல் பகுதியை சேர்ந்தவர் ரஜனி (42). கணவரைப் பிரிந்து 18 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த சசிதரன் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சசிதரன் அடிக்கடி ரஜனியின் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்று காலை ரஜனி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சசிதரன், அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர், இரும்பு கம்பியை எடுத்து சசிதரன் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் ரஜனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |