Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூன் 23) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஜூன் 23) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது..

மதுரை மாவட்டம்:

மதுரை சுப்ரமணியபுரம் துணைமின்நிலையம், டி.பி.கே.ரோடு பீடர், மாகாளிப்பட்டி துணைமின் நிலையம், மூலக்கரை மற்றும் கீரைத்துறை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை டி.பி.கே. ரோடு, கிரைம்பிராஞ்ச், காஜிமார்தெரு, தெற்குமாடவீதி, மேல கட்ராபாளையம், அமெரிக்கன் மிசன் சர்ச், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்கார தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்லமுத்து ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளியம்மன் கோவில் தெரு, கீரைத்துறை பகுதிகள், மேலத்தோப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருப்பரங்குன்றம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடல்மலைத் தெரு, என்ஜினீயரிங் கல்லூரி, ஜி.எஸ்.டி.ரோடு, சன்னதிதெரு, பாம்பன்நகர், கிரீன்நகர், திருமலையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தூத்துக்குடி மாவட்டம்:

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, அமலி நகர், தோப்பூர், சண்முகபுரம், முத்து நகர், காந்தி நகர், சாமியார்தோப்பு, காயல்பட்டினம், அருணாசலபுரம், கொம்புத்துறை, சிங்கிதுறை, முத்து கிருஷ்னாபுரம், ராஜமணியாபுரம், பாரதிநகர், நடராஜ நகர், காமராஜபுரம், பஜார் தெற்கு, அங்கமங்கலம், அன்பு நகர், தோப்புவிளைரோடு, தச்சமொழி, அமராவதிகுளம், புளியடி மாரியம்மன் கோவில் தெரு, சொக்கலிங்கபுரம், கருவேலம்பாடு, கருங்கடல், நாசரேத் ஆழ்வார் ரோடு, மர்காஷியஸ் ரோடு, ஆழவார்தோப்பு, அப்பன்கோவில், வரதராஜபுரம், வாலிவிளை, பிள்ளைவிளை, புதுமனை, குலசேகரன்பட்டினம், கொட்டங்காடு, மணப்பாடு, மாதவன்குறிச்சி, உசரத்துகுடியிருப்பு மற்றும் புத்தன்தருவை ஆகிய பகுதிகளில்இன்று  காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தருமபுரி மாவட்டம்:

இருமத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று  காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

கம்பைநல்லூா், பூமிசமுத்திரம், கே.ஈச்சம்பாடி, சொா்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரப்பட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லமாபுரம், பள்ளம்பட்டி, பெரிசாகவுண்டம்பட்டி, காட்டானூா், வெண்ணாம்பட்டி, பட்டகப்பட்டி, பெரமாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைப்பட்டி, பள்ளத்தூா், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூா், வாடமங்கலம், கொண்றம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

வேலூா் மாவட்டம்:

இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. மின்தடை பகுதிகள்: புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூா் டவுன், பஜாா், சலவன்பேட்டை, ஆபிஸா்ஸ் லைன், கஸ்பா, ஊசூா், கொணவட்டம், சேண்பாக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
இறைவன்காடு மின்தடை பகுதிகள்: வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிப்பாளையம், அதைச்சுற்றியுள்ள பகுதிகள்.

திருநெல்வேலி மாவட்டம்:

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் மற்றும் நவ்வலடி துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் நவ்வலடி, ஆற்றங்கரைபள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம், மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிக்குறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Categories

Tech |