கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தான கவுடர், நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர். காவை, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு விசாரணையில் 4 மூத்த வழக்கறிஞ்சர்கள் கருத்தொற்றுமையுடன் பேசி அறிக்கை அளிக்க நீதிபதிகள் கேட்டிருந்த நிலையில் நாளை இதன் விசாரணை நடைபெறுகின்றது.