மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வியாபாரியான சாகுல் அமீது
என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்ரின் ரோஸ் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிறந்து 10 மாதம் ஆன பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது வீட்டில் நீண்ட நேரமாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அப்ரின் ரோஸ் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நிஷா என்பவர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாகுல் அமீதிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சாகுல் அமீது தனது மனைவியை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.