அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை தொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளன. பொதுக்குழு நடப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொது குழுவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வாதாடினார்.
ஆனால் நாளை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.