தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சிறு செயலும் கடினமாக இருக்கும்.
பொது இடங்களில் நிதானத்துடன் பேச வேண்டும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று நீங்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். கணவன் மனைவி இருவரும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் யோசித்து பேசவேண்டும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கோபத்தினை தவிர்க்க வேண்டும்.
தேவையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு கஷ்டமான சூழ்நிலையை நிலவும். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும். இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.