Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” காதலனை திருமணம் செய்த கல்லூரி மாணவி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாண்டான்விடுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் உள்ளார் . இந்நிலையில் கவிதாவை காணவில்லை என அவரது தந்தை மழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கவிதா செல்லக்கண்ணு(25) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து திருப்பூரில் இருக்கும் கோவிலில் இருவரும் திருமணம் செய்து பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. இதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட இருவரும் திருமண வயதை கடந்து விட்டதால் காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |