மாவட்ட அளவிலான சி.டிவிஷன் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எச். ஏ. டி. பி. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற சி.டிவிஷன் கால்பந்து லீக் போட்டியின் கடைசி நாள் போட்டி நடைபெற்றது. இதில் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், கால்பந்து கழக தலைவர் மணி, துணை தலைவர் மனோகரன் வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் நடைபெற்ற போட்டியில் ஓரியண்டல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் 25 புள்ளிகளை பெற்று வெற்றிபெற்றது. இதனையடுத்து அதிகாரிகள் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளனர்.