11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2 துணை தேர்வு ஜூலை 25 -ஆகஸ்ட் 1, 12 துனைதேர்வு ஆகஸ்ட்2- ஆகஸ்ட் 10 வரை நடைபெறும். இதேபோல் பத்தாம் வகுப்பு துணை தேர்வு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
துணை தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக 175 ரூபாய் செலுத்த வேண்டும். தனித்தேர்வில் தோல்வியுற்ற தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாய் கட்டணம், இதர கட்டணம் 35இம், ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். முதல்முறையாக பிளஸ் டூ தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் 185 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் இது தொடர்பான அறிவுரைகளைத் www.dge.tn.gov.in மூலம் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.