கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் பிஏ2, பிஏ 2.38 வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸானது குஜராத், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, கேரளா மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இதற்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்குகிறார்.
இதில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா, மருந்து துறை செயலாளர் அபர்ணா, உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலாளர் ராஜேஷ் கோகலே மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தாக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மேலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.