Categories
தேசிய செய்திகள்

WOW: இனி இதுலையும் சமைக்கலாம்…. இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி……!!!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் சூழ்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சூரியஒளி வாயிலாக இயங்கும் அடுப்பை உருவாக்கி இருக்கிறது. சூரிய ஒளியின் வாயிலாக உருவாகும் வெப்பசக்தியை சேமித்து வைத்து இரவிலும் இந்த அடுப்பைப் பயன்படுத்தும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான ஹா்தீப்சிங் புரி இந்த அடுப்பை பயன்படுத்தி சோதித்துப் பாா்த்தாா். அதாவது “சூா்யா நுடன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த அடுப்பின் விலையானது ரூபாய் 18,000 -ரூபாய் 30,000 வரை இருக்கும் எனவும் 3 லட்சம் அடுப்புகளை உருவாக்கினால் இதன் விலை ரூபாய் 10,000 முதல் ரூபாய் 12,000 ஆயிரமாக குறையும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் ராம்குமாா் கூறினார்.

இதையடுத்து அவா் கூறியதாவது “சூரியஒளி படக்கூடிய இடத்திற்கு இந்த அடுப்பினை எடுத்துச்செல்ல வேண்டிய அவசியமில்லை. சூரியஒளி வாயிலாக பெறப்படும் சக்தியை சிறப்பு இயந்திரம் மூலம் வெப்ப சக்தியாக மாற்றி அதற்குரிய பேட்டரியில் சேமிக்கப்படும். மேலும் சூரிய ஒளியானது குறைவாக இருக்கும் லடாக்பகுதி உட்பட 60 இடங்களில் வைத்து இந்தஅடுப்பு சோதனை செய்யப்படுகிறது.

அந்த சோதனை முடிந்ததும் வா்த்தக ரீதியிலான தயாரிப்பு துவங்கப்படும். ஒரு முறை வாங்கினால் 10 வருடங்களுக்கு எவ்வித பராமரிப்பும் இன்றி அடுப்பைப் பயன்படுத்தலாம். சூரியஒளித் தகடும் 25 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும். குறைவான சூரிய வெப்பசக்தி இருக்கும்போது, மின்சார பயன்பாட்டிலும் இந்த அடுப்பை இயக்கலாம்” என்று அவர் தெரிவித்தார். இந்த அடுப்பை வைத்து தன் வீட்டில் மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் சமையல் செய்தாா். அதனை தொடர்ந்து இன்னும் 2 (அல்லது)3 மாதங்களில் இந்த அடுப்பு வா்த்தகம் ரீதியிலான விற்பனை துவங்கும் எனவும் அவா் கூறினார்.

Categories

Tech |