Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர்”… குவிந்து வரும் பாராட்டு…!!!!!

கோவை குனியமுத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான் (34). பிளம்பர் ஆக பணியாற்றி வரும் இவர் நேற்று காலையில் வேலைக்காக கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாலாங்குளம் அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இந்தநிலையில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தனது வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை பார்த்ததும் தனது வாகனத்தை நிறுத்திய இன்ஸ்பெக்டர் அருண் அங்கு ஓடிச் சென்று படுகாயம் அடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இடது காலில் முறிவு ஏற்பட்டு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட சம்பவத்தை அறிந்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |