Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறுசுழற்சி செய்யப்படும் தங்கம்…. இந்தியாவிற்கு எத்தனாவது இடம் தெரியுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!

உலக நாடு முழுவதும் தங்கத்தை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில்  பழைய தங்கத்தை மாற்றி புதிய நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதால் பழைய தங்க ஆபரணங்களை மறுசுழற்சி செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 75 டன் தங்கத்தை இந்திய மறுசுழற்சி செய்து உள்ளது. சர்வதேச நாடுகளிடம் ஒப்பிடும் போது சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் 3 இடங்களிலும், இந்தியா 4 வது இடத்தில் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாட்டில் தற்போது 35 நிறுவனம் தங்கத்தை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த திறம் 1800 டன்னாக உள்ளது. இருப்பினும் தங்க மறு சுழற்சியில் நாட்டின் முழுத்திறன் இன்னும் பயன்படுத்தவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து உலக தங்க கவுன்சிலின இந்திய பிராந்திய நிர்வாக அதிகாரியான பி.ஆர்.சோமசுந்தரம் கூறியது, “தங்கம் மறு சுழற்சியில் உலக நாடுகளுடன் போட்டியிடும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. அதற்கு அரசு முறையான கொள்கைகளை வகுத்து சில சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் நாட்டில் தங்கம் மறுசுழற்சி தொழிலானது முறைப்படுத்தப்படாமல் உள்ளது. அதை முறைப்படுத்த நடவடிக்கை அரசு மேற்கொண்டால், தங்கம் மறுசுழற்சி துறை வளர்ச்சி அடையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |