வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திவ்யஸ்ரீ கல்வி நிறுவனம், ரேவா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணதேவராயா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், இருக்கைகளை முடக்கி வைப்பதாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக கர்நாடகா மற்றும் கோவா மண்டலத்தைச் சேர்ந்த வருமானத் துறை அதிகாரிகள் 250 பேர் கொண்ட குழு தனியார் கல்வி நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கார்ப்பரேட் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.