ஓம் ரௌத் இயக்கிய ஆதி புருஸ் படத்திற்காக பிரபாஸின் சம்பளம் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றது. 500 கோடி செலவில் இந்த படம் உருவாகின்றது. மேலும் பிரபாஸின் சம்பளம் மட்டும் சுமார் 120 கோடி எனவும் இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் பிரபாஸ் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வந்த சாஹோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்திருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2022 இல் வெளியான ராதே ஷ்யாம் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இது அனைத்தும் உற்பத்தியாளர்களை மிகவும் கவலையடைய செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து ரீதியில் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் டி சீரிஸ், ரெட்ரோஃபைல் பேனரின் கீழ் பூஷன் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் ஓம் ரௌத் போன்றோர் தயாரிக்கின்றனர்.
சாஹோ, ராதேஷ்யாம் படங்களுக்குப் பின் தயாரிப்பாளர் பூஷன் குமாருடன் இணைந்து பிரபாஸ் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் ஆதிபுருஷ். பிரபாஸ் தவிர கிருத்தி சனோன், சைஃப் அலி கான், சன்னி சிங், தேவதத்தா நாகே மற்றும் போனஸ் சவுகான் போன்றோரும் இந்தப் படத்தில் நடித்து இருக்கின்றனர். இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படம் ஜனவரி 12, 2023 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.