இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் “தி வாரியர்” ஆகும். தெலுங்கு திரை உலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதல் முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர். இதையடுத்து ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பாக ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கும் தி வாரியர் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்தை பவன் குமார் வழங்கவுள்ளார். இதனிடையில் ராம் பொத்தினேனி முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக தேவி ஸ்ரீபிரசாத் இசையில் சிலம்பரசன் பாடிய புல்லட் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள விசில்பாடலை நடிகர் சூர்யா அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆந்தோனிதாசன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
Here’s the #WhistleSong from #TheWarriorrhttps://t.co/4v4ED7InOz
All the best for a super success!! @dirlingusamy @ThisIsDSP @RamSayz @AadhiOfficial @IamKrithiShetty— Suriya Sivakumar (@Suriya_offl) June 22, 2022