பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய அப்பா மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அஜித்தும், விஜய்யும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாகவும், அதற்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளதாகவும், அந்தப் படத்தை தன்னுடைய மகன் வெங்கட்பிரபு இயக்கப் போவதாகவும் கூறினார். அதன்பிறகு அஜித் மற்றும் விஜய் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கங்கை அமரன் கூறினார். இந்த செய்தி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் மாஸ் நடிகர்களான அஜித்தும், விஜய்யும் ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில், சில ரசிகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தால் நன்றாகதான் இருக்கும் என்று கூறி வந்தனர். இந்த சமயத்தில் கங்கை அமரன் அஜித் மற்றும் விஜய் ஒன்றாக இணைந்து படம் நடிக்க போகின்றனர் என்று கூறியது உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பொய்யான தகவலை பரப்பியதால் தான் சிக்கலில் மாட்டிக் கொண்டதாக வெங்கட் பிரபு தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். இதன் காரணமாக வெங்கட்பிரபு தன்னுடைய தந்தை மீது கோபத்தில் இருக்கிறாராம்.