தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். நேற்று விஜய்யின் 40 வது பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படம் குடும்ப பானையில் உருவாக்க உள்ளது. என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தனர். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஜய்யின் “வாரிசு” டைட்டிலுக்கும் அஜித் படத்திற்கும் உள்ள ஒற்றுமை குறித்து ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது, கடைசியாக வெளியான அஜித்தின் படங்கள் எல்லாம் “v” செண்டிமெண்டில் வெளியானது. வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம், வலிமை அஜித்தின் கடைசி 5 படங்களும் “v” ஆரம்பமானது. இந்நிலையில் தற்போது விஜய்யின் படமும் “v” யில் துவங்கி உள்ளது என்று அஜித்தின் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அஜித் சென்டிமென்டை விஜயும் பாலோவ் செய்கிறார் என்று ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர். மேலும் இதுவரை “v” யில் ஆரம்பித்த விஜய்யின் வேலாயுதம், வில்லு, வேட்டைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அந்த வழக்கத்தை வாரிசு கிடைக்கும் என்று ரசிகர்கள் கிண்டல் அடிக்கின்றனர்.