Categories
மாநில செய்திகள்

“வரதட்சனையோடு வா இல்லனா செத்துப் போ”…. 4 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை…. உச்சகட்ட கொடூரம்….!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த கணபதி (32) கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் எதிர் வீட்டை சேர்ந்த சத்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வந்து திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி சத்யா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனிடையே கணபதி மற்றும் அவரின் தாய் அம்புஜம் ஆகியோர் சத்யாவிடம் வரதட்சணையாக புல்லட், நகைகள் வாங்கி வரச் சொல்லி சண்டை போட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக சத்யா தனது தந்தை ராமநாதனிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் சத்யா தன்னை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுமாறு தனது கணவரிடம் கூறியுள்ளார் . அதற்கு அவரும் அவரது தாயாரும் முதலில் வரதட்சணை கொண்டுவா அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறி வரதட்சணை கொண்டு வரவில்லை என்றால் நீ செத்துப் போ என்று கடுமையாக திட்டி உள்ளனர்.அதனால் மனமுடைந்த சத்தியா வீட்டின் பின்புற வயலில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய வழக்கில் கணபதி மற்றும் அவரது தாய் அம்புஜம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |