Categories
அரசியல்

“திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!!!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று காலை சென்னை திருவான்மியூரில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அதன்பின் பேசிய அவர் இந்த இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடைபெறுகிறது. இதில் நாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி  கொண்டிருக்கின்றோம்.

மேலும் ஒரு பக்கத்தில் இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நான் அந்த பிரச்சினைக்கு எல்லாம் போக விரும்பவில்லை. அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள் தான் நம்மை அழிக்க முடிவு செய்துள்ளனர். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் இருக்கின்றார்கள். திமுக அழிந்த வரலாறே கிடையாது. மேலும் அனைவரின் சார்பில் மணமக்களை வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |