சீனாவில் சிக்கித் தவித்த மாலத்தீவு நாட்டை சேர்ந்த 7 பேரை இந்தியா மீட்டுக்கொண்டு வந்ததற்கு அந்நாட்டு அதிபர் முகமது சோலி நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் 304_ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 11,791 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மீதம் இருக்கும் இந்தியர்களை மீட்க இரண்டாவதாக ஒரு தனி விமானம் இந்தியாவில் இருந்து புறப்படட்டது. அந்த விமானமும் சீனாவின் வுஹான் நகரில் தங்கியிருந்த எஞ்சிய 323 இந்தியர்களுடன் இன்று காலை 9 மணிக்கு டெல்லி வந்தது. இதில் மாலத்தீவு நாட்டை சேர்ந்த 7 பேரும் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் கோரோனா பாதிப்பு உள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், சீனாவின் வுஹனில் வசிக்கும் மாலத்தீவினர் 7 பேரை மீட்டதற்கு பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த செயல் இரு நாடுகளுக்கும் ஒரு நல்ல நட்பு மற்றும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து சீனாவில் வாழும் மாலத்தீவர்களுக்கு சீன அரசு உதவி செய்ததற்கும் நன்றி தெரியவித்துள்ளார்.
My thanks and gratitude to PM @narendramodi, EM @DrSJaishankar and the Government of India for expeditiously evacuating the 7 Maldivians residing in Wuhan, China. This gesture is a fine example of the outstanding friendship and camaraderie between our two countries. https://t.co/2kdWLmYqft
— Ibrahim Mohamed Solih (@ibusolih) February 2, 2020