இந்தியாவில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பொருட்கள் முதல் குடிநீர் வரை அன்றாட பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற சூழலில் சாமானியர்களின் செலவுகள் அதிகரித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்திய ரிசர்வ் வங்கி நோட்டுக்களை அச்சிடுவதற்கு அதிகம் செலவு செய்கிறது. ரூ. 200 நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு ரூ.500 விட அதிகமாக உள்ளது. தற்போது அனைத்து நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு குறித்தும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நோட்டுகள் அச்சிட ஆகும் செலவு குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ரூ.10 நோட்டுகளை அச்சடிப்பது ரூ.20 ஐ விட விலை உயர்ந்தது என்று கூறியது. இதற்கு காரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காகிதங்களில் நிலையே ஆகும். இது தவிர ரூ.2000 நோட்டு கள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட நிறுத்தி விட்டது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2020-21 ரூ.50 நோட்டுக்களை ஆயிரம் தாள்கள் அச்சிடுவதற்கான செலவு ரூ.920 ஆக இருந்தது. ஆனால் 2021 2022 23% அதிகரித்து ரூ.1,130 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ரூ.20 நோட்டுக்கான அளவு உயர்ந்துள்ளது. எந்த நோட்டை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்பதை பார்ப்போம்.
- ரூ.10 நோட்டுகளை 1000 தாள்கள் அச்சடிக்க ஆகும் செலவு – ரூ.960
- ரூ.20 நோட்டுகளை 1000 தாள்கள் அச்சடிக்க ஆகும் செலவு – ரூ 950
- ரூ.50 நோட்டுகளை 1000 தாள்கள் அச்சடிக்க ஆகும் செலவு – ரூ 1,130
- ரூ.100 நோட்டுகளை 1000 தாள்கள் அச்சடிக்க ஆகும் செலவு – ரூ. 1,770
- ரூ.200 நோட்டுகளை 1000 தாள்கள் அச்சடிக்க ஆகும் செலவு – ரூ.2,370
- ரூ.500 நோட்டுகளை 1000 தாள்கள் அச்சடிக்க ஆகும் செலவு – ரூ 2,290