நாட்டின் உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஒரு புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு பதப்படுத்துதல் ஆலைகள் மற்றும் நிறுவனங்கள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் பணி மத்திய அரசு தற்போது அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் கிசான் சம்பதா யோஜன என்ற திட்டத்தில் கீழ் தொழில் தொடங்குவதற்கு தொழில்முனைவோர்,முதலீட்டாளர்கள் மற்றும் புரமோட்டார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திட்டங்கள்:
வேளாண் பதப்படுத்துதல் கிளஸ்டர் திட்டம்
உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஆலைகளை உருவாக்கும் திட்டம்
குளிர்பதன மற்றும் மதிப்புக்கூட்டு உள்கட்டமைப்பு திட்டம்
உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதி உள்கட்டமைப்பு
ஆபரேஷன் கிரீன்ஸ்
மேற்காணும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://www.sampada-mofpi.gov.in/என்ற இணையதளத்தில் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி காலை 10 மணிக்குள் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.