இந்தியாவில் வங்கி மோசடிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது DHFL வங்கியும் இணைந்திருக்கிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி கபில் வதவன், இயக்குநர் தீரஜ்வதவன் மற்றும் சில பேர் சிபிஐ வசம் சிக்கி இருக்கின்றனர். சி.பி.ஐ வளையத்தில் சிக்கிய மிகப்பெரிய வங்கிமோசடி இது தான் என கூறப்படுகிறது. அதாவது இந்த மோசடியின் மொத்த மதிப்பு ரூபாய் 34,615 கோடி ஆகும். கடந்த ஜூன் 20ஆம் தேதி DHFL வங்கி மீது யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 வங்கிகள் இணைந்து புகார் கொடுத்தது.
இந்த வங்கிக்கு மொத்தம் ரூபாய் 42,871 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மோசடி அரேங்கேறியுள்ளது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் 50 பேர் அந்த வங்கிக்குச் சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி மும்பையின் பல இடங்களில் நடந்த இந்த சோதனையில் ரியல் எஸ்டேட் சேர்ந்த இன்னும் 8 பேர் சிக்கி உள்ளனர். அந்த 17 வங்கிகள் கூட்டமைப்பில்DHFL வங்கியானது வாங்கிய கடன் தொகையில் ரூபாய்.34,614 கோடியைத் திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வங்கியின் அனைத்து சொத்துகளும் செயல்படா சொத்துகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019 ஜனவரி மாதத்திலேயே இந்த வங்கி விசாரணை வளையத்தில் சிக்கியது. வங்கிகளிடம் பெற்ற கடனைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பல ரியல்எஸ்டேட் சொத்துகளில் இந்த வங்கி முதலீடு செய்ததும் தெரியவந்து இருக்கிறது. வங்கித்துறையில் அரேங்கேறியுள்ள இந்த மோசடியானது வங்கி வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.