Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் ஒரே வருடத்தில் 2 லட்சம் கருக்கலைப்புகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

பிரிட்டன் மற்றும் வேல்ஸில் கடந்த வருடத்தில் அதிகமான கருக்கலைப்புகள் நடந்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது.

சுகாதார மேம்பாட்டு துறை அலுவலகமானது கடந்த வருடத்தில் கருக்கலைப்புகள் செய்யப்பட்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த வருடத்தில் ஏறக்குறைய 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் வைத்து கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, கொரோனா காலகட்டத்தில் அஞ்சல் வழியில் மாத்திரைகளை வாங்கி மருத்துவர்களை நேரடியாக சந்திக்காமல் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தினை குறைப்பதற்கு சுகாதார அமைச்சர்கள் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் எந்த பயனும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

Categories

Tech |