எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சந்தித்தனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை அண்ணாமலை தனிதனியாக சந்தித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சிடி ரவி வருகை தந்துள்ளனர்.
வரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு அளிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வத்திடம் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அண்ணாமலை மற்றும் சிடி ரவி சென்றிருந்தனர். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.