Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் கைது….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது சூர்யா பாஜகவின் ஓபிசி பிரிவில் பொது செயலாளராக உள்ளார். இவர் கடந்த 11ஆம் தேதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சூர்யாவின் கார் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய போது பஸ் மோதியதில் தனது காருக்கு சேதம் என்று கூறிய டிரைவரை மிரட்டி பஸ் எடுத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சூர்யாவை கைது செய்துள்ளனர். கைதான சூர்யாவை நீதிபதி முன் ஆஜர் படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |