கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியகாடு பகுதியில் மூதாட்டியான அம்மணியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் முழுமையாக கண்பார்வை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மணியம்மாள் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்த அம்மணியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அம்மணியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.