சண்டே ஆனா போதும் நமக்கு அசைவ உணவு இல்லாமல் அந்த நாளே போகாது, அவ்வாறு நாம் வாங்கி சாப்பிடும் ஆட்டுக்கறியை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..?
1. தொடை, சந்துக் கறிகளைக் பாத்து வாங்க வேண்டும்.
2. ஏன் என்றால் அப்பகுதிகளில் தான் சதை அதிகமாக இருக்கும். இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும்.
3. பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும்.
4. மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதித் தசைகள் மென்மையாக இருக்கும்.
5. இதனை அறிந்த நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும்.
6. மேலும், நீங்கள் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதுதானா என்பதனை அறிய இறைச்சியில் தேங்கி இருக்கும் இரத்த அளவே அளவுகோல்.
7. நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆடு வெட்டப்படும் போது இரத்தம் முழுவதுமாக வடிந்து விடுவதால், இறைச்சியில் தேங்கி இருக்காது.
8. ஆனால் நோயுற்ற ஆடுகளில் சிறிது இரத்த
9. ஒரே வயதான ஆண், பெண் ஆடுகளில் பெட்டை ஆட்டு இறைச்சியே நன்றாக இருக்கும்.
நாம் வாங்கும் வெள்ளாட்டு கறியில் எத்தனை அளவு சத்துக்கள் இருக்கின்றது:
தாது உப்பு – 1.1%
புரதம் – 21.4 %
கொழுப்பு – 3.6 %
ஈரப்பதம் – 74.2%
நோய் உள்ள ஆடுகளின் கறியில் அறுத்தும் அதன் இரத்தம் படிந்திருக்கும். அதை கவனமாக பார்த்து வாங்குங்கள்.
ஒரே வயதான ஆண், பெண் ஆடுகளில் பெட்டை ஆட்டு இறைச்சியே நன்றாக இருக்கும்.