மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாய்மாமனை கல்லால் அடித்துக் கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரின் தங்கை செல்வி மற்றும் அவருடைய மகன் ஜெயக்குமார் (24). இவர்கள் இருவரும் மரியதாஸின் வீட்டிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற 12-ஆம் தேதி இரவு வீட்டில் மரியதாஸ் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மரியதாஸை அவரின் தங்கை மகனே கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்ததை தொடர்ந்து ஜெயக்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் ஜெயக்குமாரை தேடிவந்த நிலையில் அவரின் செல்போன் சிக்னல் மூலம் திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரிய வந்த உடனே போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தார்கள். பின் போலீசில் வாக்குமூலம் தந்த ஜெயக்குமார் தன் தாய்மாமனிடம் மது குடிப்பதற்காக 200 ரூபாய் கேட்டேன். அவர் கொடுக்க மறுத்ததால் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறியிருக்கிறார்.