மின்னல் தாக்கிய 4 ஆடுகள் உயிரிழந்த நிலையில், வாலிபர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பருத்திக்காடு வேட்டை பாறை பகுதியில் சுந்தர் ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று பொம்மையன் கரடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது சுந்தர்ராஜ் ஆடுகளுடன் அங்கிருந்த குடிசை ஓரம் ஒதுங்கி நின்றுள்ளார்.
இதனையடுத்து திடீரென மின்னல் தாக்கியதால் 4 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் மின்னல் தாக்கி மயங்கி விழுந்த சுந்தர்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.